புதிய வெப் தொடரில் நடித்து வரும்… நடிகை பிரியங்கா
நடிகை பிரியங்கா மோகன் தமிழ் மற்றும் தெலுங்கு மொழி படங்களில் பிஸியாக நடித்து வரும் இளம் நடிகை.
தற்போது ஒரு புதிய வெப் தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க பிரியங்கா மோகன் ஒப்பந்தம் ஆகியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ‛நித்தம் ஒரு வானம்’ படத்தை இயக்கிய ரா. கார்த்திக் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய வெப் தொடரில் பிரியங்கா மோகன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதன் படப்பிடிப்பு தற்போது கொரியாவில் நடைபெற்று வருகிறது. இந்த வெப் தொடர் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிப்பரப்பாகும் என்கிறார்கள்.
(Visited 63 times, 1 visits today)





