தீவிரமடையும் வரி போர் – அமெரிக்கா விரும்பினால் பேச தயார் – சீனா அறிவிப்பு

சீனாவும், அமெரிக்காவும் வரிகள் குறித்து ஆலோசனை அல்லது பேச்சுவார்த்தை நடத்தவில்லை என சீன வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் குவோ ஜியாகுன் தெரிவித்துள்ளார்.
இந்த வரி விதிப்பு போரானது அமெரிக்காவினால் தொடங்கப்பட்டது. அவசியம் என்றால் நாங்கள் போராடுவோம்.
அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்துவதற்கு விரும்பினால் நாங்கள் அதற்கு தயாராக இருக்கிறோம்.
உரையாடல் மற்றும் பேச்சுவார்த்தையானது சமத்துவம், மரியாதை மற்றும் பரஸ்பர நன்மை ஆகியவற்றின் அடிப்படையில் இருக்க வேண்டும் என சீன வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் குவோ ஜியாகுன் மேலும் தெரிவித்துள்ளார்.
(Visited 2 times, 2 visits today)