பிரான்சில் தனியார் பள்ளியில் கத்தி குத்து தாக்குதல் – மாணவர் ஒருவர் பலி!
மேற்கு பிரான்சில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் நடந்த கத்திக்குத்தில் ஒரு மாணவர் கொல்லப்பட்டதாகவும், குறைந்தது மூன்று பேர் காயமடைந்ததாகவும் பிரெஞ்சு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
Notre-Dame-de-Toutes-Aides பாடசாலையில் இந்த தாக்குதல் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தாக்குதல் நடத்தியவர் ஒரு ஆசிரியரால் தடுத்து நிறுத்தப்பட்ட பின்னர் சம்பவ இடத்தில் கைது செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
தாக்குதல் குறித்து பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதாகவும், மாணவர்கள் படிப்படியாக சம்பவ இடத்தை விட்டு வெளியேற அதிகாரிகள் உதவியதாகவும் Ouest France தெரிவித்துள்ளது.
மேலும் பள்ளி அமைந்துள்ள Rue des Épinettes மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 41 times, 1 visits today)





