இலங்கையில் 300 அடி பள்ளத்தில் பாய்ந்து கல் பாறைக்குள் சிக்கிய கார்!

நல்லதன்னியவிலிருந்து கினிகத்தேன பொல்பிட்டிய நோக்கிச் சென்ற மோட்டார் வாகனம் ஒன்று வீதியை விட்டு விலகி சுமார் 300 அடி ஆழமுள்ள கெசல்கமுவ ஓயாவில் விழுந்ததில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் காரின் சாரதி காயமடைந்து லக்சபான பிராந்திய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இந்த விபத்து இன்று (22) காலை 7.15 மணியளவில் நல்லதன்னிய – கினிகத்தேன பிரதான சாலையில் உள்ள நோர்டன்பிரிட்ஜ் எடிட் பகுதியில் நிகழ்ந்துள்ளது.
காரில் திடீரென ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையை விட்டு விலகி, பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக தெரியவந்துள்ளது.
விபத்து குறித்த மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(Visited 20 times, 1 visits today)