ஐ.பி.எல் வரலாற்றில் புதிய சாதனை படைத்த ரோஹித் சர்மா

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிகள் மோதின.
முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 176 ஓட்டங்களைப் பெற்றது.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய மும்பை இந்தியன்ஸ் அணி 15.4 ஓவர்களில் 177 ஓட்டங்களைப் பெற்று போட்டியில் வெற்றியடைந்தது.
ரோஹித் சர்மா ஆட்டமிழக்காமல் 77 ஓட்டங்களைப் பெற்று போட்டியின் ஆட்டநாயகனாகத் தெரிவுசெய்யப்பட்டார்.
இதனடிப்படையில் ஐ.பி.எல் தொடர் வரலாற்றில் அதிக ஆட்டநாயகன் விருதை வென்ற இந்திய வீரர் என்ற சாதனையை ரோஹித் சர்மா படைத்துள்ளார்.
முன்னதாக விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் தலா 19 முறை ஆட்டநாயகன் விருதை வென்றிருந்த நிலையில் தற்போது ரோஹித் சர்மா 20ஆவது முறை இந்த விருதை வென்று சாதனை படைத்துள்ளார்.