கண்துடைப்பு நாடகமா புட்டினின் போர் நிறுத்த நடவடிக்கை – உக்ரைனில் தொடரும் தாக்குதல்கள்!

ஈஸ்டர் போர் நிறுத்தத்திற்கு விளாடிமிர் புதின் அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து ரஷ்ய துருப்புக்கள் உக்ரைனைத் தொடர்ந்து தாக்கி வருவதாக உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தளபதி அறிக்கைகளின்படி, பல முன்னணிப் பிரிவுகளில் ரஷ்ய தாக்குதல் நடவடிக்கைகள் தொடர்கின்றன, மேலும் ரஷ்ய பீரங்கித் தாக்குதல்கள் இன்னும் குறையவில்லை” என்று ஜெலென்ஸ்கி ஒரு சமூக ஊடகப் பதிவில் கூறியுள்ளார்.
எந்தவொரு சாத்தியமான ரஷ்ய தாக்குதலுக்கும் “பொருத்தமான பதில் வழங்கப்படும்” என்றும் உக்ரைன் தலைவர் எச்சரித்துள்ளார்.
மனிதாபிமான அடிப்படையில் ரஷ்ய அதிபர் புட்டின் தற்காலிக போர் நிறுத்தத்தை அறிவித்திருந்தார். கிரெம்ளினின் கூற்றுப்படி, போர் நிறுத்தம் சனிக்கிழமை மாலை 6 மணி முதல் ஈஸ்டர் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு வரை நீடிக்கும்.
இருப்பினும் இந்த காலப்பகுதியில் உக்ரைனின் பல பகுதிகளில் தாக்குதல்கள் தொடர்வதாக குறிப்பிடப்படுகிறது.