துருக்கிய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டம் – 200 பேர் மீதான விசாரணை ஆரம்பம்!

துருக்கிய அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களில் கைது செய்யப்பட்ட கிட்டத்தட்ட 200 பேர் மீதான விசாரணை இஸ்தான்புல்லில் தொடங்கியுள்ளது.
இஸ்தான்புல்லின் மேயர் எக்ரெம் இமாமோக்லு ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து மார்ச் 19 அன்று ஆர்ப்பாட்டங்கள் தொடங்கின.
போராட்டத்தில் பெரும்பாலான மாணவர்கள் உள்பட 08 பத்திரிக்கையாளர்களும் கலந்துகொண்டனர். அவர்கள் மீதான விசாரணை நேற்று (18.04) காக்லாயன் நீதிமன்றத்தில் ஆரம்பமானது.
பேரணிகளில் கைது செய்யப்பட்டவர்களின் முதல் விசாரணை இதுவாகும். 20 குற்றவியல் விசாரணைகளில் 819 பேர் மீது விசாரணை நடத்தப்படும் என்று இஸ்தான்புல் வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
குற்றச்சாட்டுகளுக்கான தண்டனைகள் ஆறு மாதங்கள் முதல் ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படுவதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.