பிரித்தானியாவில் இனங்காணப்பட்ட Mpox தொற்றாளர் : மருத்துவ கண்காணிப்பின் கீழ் உள்ள 50 பேர்!

பிரித்தானியாவின் A&E மருத்துவமனை Mpox தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவரை இனங்கண்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனை நிர்வாகம் அதன் ஊழியர்கள் மற்றும் நோயாளர்களை கண்காணித்து வருவதாக அறிவித்துள்ளது.
கேம்பிரிட்ஜில் உள்ள Addernbooke மருத்துவமனையின் சுகாதாரத் தலைவர்கள், கடந்த வார இறுதியில் தொற்றாளர்களை கண்டறிந்தனர்.
பாதிக்கப்பட்ட நபருடன் தொடர்பு கொண்ட சுமார் 30 நோயாளிகள் மற்றும் 20 ஊழியர்கள் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Addenbrooke-ஐ நடத்தும் Cambridge University Hospitals NHS Foundation Trust-இன் செய்தித் தொடர்பாளர் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு Mpox நோயாளி ஒருவர் வந்ததைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுமார் 30 நோயாளிகள் மற்றும் 20 ஊழியர்களுடன் நாங்கள் தொடர்பில் உள்ளோம்.” எனத் தெரிவித்துள்ளார்.
(Visited 4 times, 1 visits today)