தெஹ்ரானுக்கு விஜயம் செய்த சவுதி பாதுகாப்பு அமைச்சர்

ஈரானின் அணுசக்தி திட்டம் குறித்து வாஷிங்டனுக்கும் தெஹ்ரானுக்கும் இடையிலான இரண்டாவது சுற்று பேச்சுவார்த்தைக்கு முன்னர் சவுதி அரேபியாவின் பாதுகாப்பு அமைச்சர் இளவரசர் காலித் பின் சல்மான் பல ஈரானிய அதிகாரிகளைச் சந்தித்துள்ளார்.
தெஹ்ரானில் நடந்த சந்திப்பின் போது சவுதி அரேபியாவின் மன்னர் சல்மானின் செய்தியை ஈரானிய உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனிக்கு தெரிவித்ததாக இளவரசர் காலித் குறிப்பிட்டார்.
“எங்கள் இருதரப்பு உறவுகள் மற்றும் பரஸ்பர ஆர்வமுள்ள தலைப்புகள் குறித்து நாங்கள் விவாதித்தோம்,” என்று அவர் X இல் பதிவிட்டுள்ளார்.
“ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கும் சவுதி அரேபியாவுக்கும் இடையிலான உறவு இரு நாடுகளுக்கும் நன்மை பயக்கும் என்பது எங்கள் நம்பிக்கை,” என்று நடந்த சந்திப்பில் கமேனி தெரிவித்தார்
இளவரசர் காலித் ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியன் மற்றும் ஈரானின் ஆயுதப்படைகளின் தலைமைத் தளபதி முகமது பகேரியையும் சந்தித்தார்.