விளையாட்டு

சேப்பாக்கம் ஆடுகளம் குறித்து தோனி விடுத்த கோரிக்கை

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சிஎஸ்கே அணி தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. நேற்று முன்தினம் லக்னோவில் நடைபெற்ற ஆட்டத்தில் 167 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே 3 பந்துகளை மீதம் வைத்து 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஷேய்க் ரஷீத் 27, ரச்சின் ரவீந்திரா 37, ஷிவம் துபே 43 ரன்கள் சேர்த்தனர். இறுதிக்கட்டத்தில் தோனி 11 பந்துகளில், ஒரு சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 26 ரன்கள் விளாசி அணியின் வெற்றிக்கு முக்கிய பங்களிப்பு வழங்கினார்.

இந்நிலையில் லக்னோவில் விளையாடியது போன்று பேட்ஸ்மேன்கள் நம்பிக்கையுடன் ஷாட்களை மேற்கொள்ளும் வகையிலான ஆடுகளத்தை சேப்பாக்கம் மைதான ஆடுகள வடிவமைப்பாளர்கள் அமைக்க வேண்டும் என தோனி வலியுறுத்தியுள்ளார். ஏனெனில் நடப்பு சீசனில் மந்தமாக உள்ள சேப்பாக்கம் ஆடுகளத்தில் சிஎஸ்கே அணி தொடர்ச்சியாக 3 ஆட்டங்களில் தோல்வியை சந்தித்துள்ளது. லக்னோ போட்டிக்கு பின்னர் தோனி கூறியதாவது:

போட்டியில் வெற்றி பெறுவது சிறப்பான விஷயம். இதுபோன்ற போட்டியில் விளையாடும் போது, வெற்றி பெற வேண்டும் என்ற ஆசை ஏற்படும். துரதிர்ஷ்டவசமாக முந்தைய போட்டிகள் என்ன காரணத்தினாலோ எங்கள் வழியில் செல்லவில்லை. நிறைய காரணங்கள் இருக்கலாம். எங்கள் தரப்பில் வெற்றி பெறுவதை சிறப்பாக உணருகிறோம்.

இது ஒட்டுமொத்த அணிக்கும் நம்பிக்கையை அளிக்கிறது, நாம் மேம்படுத்த விரும்பும் பகுதிகளில் மேம்படுத்த உதவுகிறது. ஆட்டம் உங்கள் வழியில் வராதபோது, கடவுள் அதை மிகவும் கடினமாக்குகிறார் என்பதை நாங்கள் அனைவரும் அறிவோம். எப்படி இருந்தாலும் தற்போதைய வெற்றி உத்வேகத்தை கொண்டுவரும் என்ற நம்புகிறோம்.

தோல்வி அடைந்த ஆட்டங்களில் பவர்பிளேவில் அணி சேர்க்கையாக இருந்தாலும் சரி அல்லது களத்தில் நிலவிய சூழ்நிலையாக இருந்தாலும் சரி நாங்கள் பந்துடன் போராடிக் கொண்டிருந்தோம். நடு ஓவர்களிலும், இறுதிக்கட்ட ஓவர்களிலும் மீண்டுவர முடியாமலும், எதிரணியை சராசரிக்கு கீழான ஸ்கோரில் கட்டுப்படுத்த முடியாமல் போராடினோம். மேலும் ஒரு பேட்டிங்கில், ஒரு குழுவாக நாங்கள் விரும்பிய தொடக்கத்தை எங்களால் பெற முடியவில்லை.

மேலும் விக்கெட் வீழ்ச்சியையும் குறிப்பிட வேண்டும். ஓரளவுக்கு தவறான நேரத்தில் விக்கெட்டுகளை இழந்து வருகிறோம். சென்னை ஆடுகளம் சற்று மெதுவாக இருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம். நாங்கள் விளையாடிய 6 ஆட்டங்களில் அதிகம் சேப்பாக்கத்தில்தான் விளையாடி உள்ளோம். சொந்த மண் மைதானத்தை விட வெளி மைதானங்களில் பேட்டிங் யூனிட் சற்று சிறப்பாக செயல்படுகிறது.

பேட்ஸ்மேன்கள் தங்கள் ஷாட்களை விளையாட நம்பிக்கையை அளிக்கும் வகையில் சற்று மேம்பட்ட ஆடுகளங்களில் விளையாட வேண்டும். பயத்துடன் நாங்கள் விளையாட விரும்பவில்லை. அதேவேளையில் பேட்ஸ்மேன்கள் ஷாட்களை தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். விளையாடுவதற்கான வாய்ப்பு இருக்க வேண்டும். ஆனால் சேப்பாக்கம் ஆடுகளத்தில் அது இல்லை.

பந்து வீச்சு, பேட்டிங் என இரண்டிலுமே சிறப்பாக செயல்பட்டோம். இன்னும் சிறப்பாக செயல்பட முடியும். பந்து வீச்சில் சில மாற்றங்களை மேற்கொண்டிருந்தோம். ஏனெனில் முதல் 6 ஓவர்களில் சிறப்பாக செயல்படுவதை உறுதிப்படுத்த விரும்பினோம். பவர்பிளேவில் பந்துவீச அதிக பந்து வீச்சாளர்கள் தேவை. நாங்கள் அஸ்வின் மீது அதிக அழுத்தம் கொடுத்தோம். அவர், முதல் 6 ஓவர்களுக்குள் 2 ஓவர்கள் வீசினார். தற்போது அமைந்துள்ள பந்துவீச்சு இது ஒரு சிறந்த தாக்குதலாகத் தெரிகிறது.

ஷேக் ரஷீத் நன்றாக பேட்டிங் செய்தார். அவர் சில ஆண்டுகளாக எங்களுடன் இருக்கிறார். இந்த ஆண்டு அவர் வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக வலைப்பயிற்சியில் சிறப்பாக பேட்டிங் செய்து வருகிறார். இது ஒரு தொடக்கம்தான். உண்மையான ஷாட்களால் ஆதிக்கம் செலுத்தும் திறன் அவரிடம் உள்ளது. இவ்வாறு தோனி கூறினார்.

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

இந்தியா விளையாட்டு

ராஜஸ்தான் வெற்றிபெற 155 ரன்களை இலக்காக நிர்ணயித்த லக்னோ

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் 26-வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ சூப்பர்
இந்தியா விளையாட்டு

10 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணி வெற்றி

  • April 19, 2023
10 அணிகள் பங்கேற்றுள்ள 16-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. ஜெய்ப்பூரில் நடைபெற்ற 26வது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், லக்னோ