ஜெர்மனியில் வெளிநாட்டவர்களுக்கு தயாரகும் ஆபத்தான முகாம்

ஜெர்மனியின் Düsseldorf நகரில், AfD கட்சி ஒரு அதிர்ச்சியூட்டும் திட்டத்தை முன்வைத்துள்ளது.
புகலிடம் தேடுபவர்களையும், போதைப்பொருள் பிரச்சனையால் பாதிக்கப்பட்ட வீடற்றவர்களையும் பழைய இராணுவ தளத்தில் ஒரு சிறப்பு தங்குமிடத்தில் வைப்பதே குறித்த திட்டமாகும்.
பெர்கிஷே பாராக்ஸ் என்ற குறித்த இராணுவ தளம் அபாயகரமான இந்த இடத்தை “சுகாதாரம் மற்றும் வாய்ப்புக்கான இலாப நோக்கற்ற மையம்” என்று அழைக்கிறது.
சமூக சேவைகளில் அவர்களுக்கு வேலைகளை வழங்குவதன் மூலம் இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கு இந்த திட்டம் உதவும் என்று அவர்கள் கூறுகிறார்கள்.
இருப்பினும், தெருக்களில் காணப்படும் வீடற்ற மக்கள் அங்கு வாழ வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் அவர்களின் திட்டம் எடுத்துரைக்கின்றது.
இந்த யோசனை குறித்து பலரும் தமது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர். இது ஒரு தொழிலாளர் முகாம் போல் தெரிகிறது என பல நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த யோசனை அவமரியாதைக்குரியது மற்றும் கொடூரமானது என்று அவர்கள் நம்புகின்றனர்.
இந்தத் திட்டம் வரலாற்றில் இருண்ட காலங்களை நினைவூட்டுவதாக டுஸ்ஸெல்டார்ஃப் நகரில் போதைப்பொருள் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் Michael Harbaum தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது அக்கறை மற்றும் புரிதல் இல்லாததை இது காட்டுகிறது என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.
இந்தத் திட்டம் AfD யின் தீவிர வலதுசாரி சிந்தனைக்கு ஒரு எடுத்துக்காட்டு என்று விமர்சகர்கள் கூறுகின்றனர்.இந்தத் திட்டம் நிறைவேற்றபட கூடாது என பலரும் விரும்புகின்றனர்.