போருக்கு எதிராக குரல் கொடுத்த பெண்ணுக்கு விஷம் வைத்து கொலை முயற்சி!
ரஷ்யாவில் போருக்கு எதிராக பல முன்னெடுப்புகளை செய்து வந்த நடாலியா அர்னோ, என்ற பெண்ணுக்கு ஐரோப்பிய பயணத்தின் போது விஷம் வைத்து கொல்ல முயற்சி செய்யப்பட்டுள்ளது.
ரஷ்யாவிலுள்ள உலக நாடுகளின் நிறுவனமான ரஷ்ய ஜனநாயகம், என்ற குழுவை சேர்ந்த பெண்ணுக்கு, விஷம் வைத்து கொல்ல முயன்றதாக புகார் அளித்துள்ளது.தற்போது அமெரிக்காவில் வாழும் நடாலியா அர்னோ என்ற பெண், கடந்த 2014 ஆண்டு ரஷ்யா மற்றும் உக்ரைன் போருக்கு எதிராக போராடிய குற்றத்திற்காக, நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுப் பயணம் சென்ற நடாலியா, ஒரு ஹோட்டலில் தங்கியிருந்திருக்கிறார். வெளியே சென்று விட்டு அவர் திரும்பி ஹோட்டலுக்கு வரும் போது கதவு திறந்து இருக்கிறது.இதனிடையே சந்தேகம் அடைந்த அவர், ஹோட்டல் தலைமை அதிகாரிகளை விசாரிக்கையில், பணியாளர்கள் ஏதேனும் தவறு செய்திருக்கலாம் என கூறியுள்ளனர்.
பின்னர் பயணம் முடித்து அமெரிக்கா திரும்பி கொண்டிருந்த அவருக்கு திடீரென தலைச்சுற்றல், மயக்கம் வருவது போல் இருந்திருக்கிறது. இதனை தொடர்ந்து மருத்துவ பரிசோதனை செய்திருக்கிறார்.அதில் அவரது உடலில் விஷம் கலந்திருப்பது உறுதியாகியிருக்கிறது. உடனே மருத்துவர்கள் நடாலியாவிற்கு தீவிர சிகிச்சை அளித்து காப்பாற்றியுள்ளனர்.
நடாலியா தான் ஹோட்டலில் தங்கியிருந்த போது, ஏதோ வித்தியாசமாக வாசனை திரவத்தின் மணம் வந்ததாக அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் எழுதியுள்ளார்.மேலும் அவர் ரஷ்ய ஜனாதிபதி புடினின் எதிரியான அலெக்ஸி நவால்னிக்கு விஷம் வைக்கப்பட்டதை போன்று, தனக்கும் விஷம் வைக்கப்பட்டிருக்கலாம் என அஞ்சுவதாக கூறியுள்ளார்.
எனக்கு தற்போது உடல் நிலை பரவாயில்லை, ஆனால் விஷத்தால் நரம்பு கோளாறுகள் ஏற்பட்டுள்ளன. உக்ரைன் போருக்கு எதிராக குரல் கொடுத்ததால், ரஷ்யா இதனை செய்திருக்கலாம்.நான் கடந்த 2014ம் ஆண்டு நாடு கடத்தப்பட்ட பின், உக்ரைன் போர் மிகவும் உக்கிரமாக நடக்கிறது.’ என நடாலியா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.