ஸ்பெயினில் நள்ளிரவில் ஏற்பட்ட நிலநடுக்கம் – அதிர்ச்சியில் சுற்றுலா பயணிகள்!
ஸ்பெயினில் சுற்றுலாப் பகுதியான டோரெவிஜாவில் நிலநடுக்கம் ஏற்பட்டதை தொடர்ந்து பல சுற்றுலா பயணிகள் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈஸ்டர் விடுமுறைக்காக விடுமுறை இடத்தில் தங்கியிருந்த குடியிருப்பாளர்கள் மற்றும் பிரிட்டிஷ்காரர்கள், நள்ளிரவுக்குப் பிறகு நிலநடுக்கம் ஏற்பட்டபோது ” படுக்கையில் இருந்து தூக்கி எறியப்பட்டதாக” நபர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
டோரெவிஜாவின் மையத்திலிருந்து ஐந்து கிலோமீட்டர் தொலைவில் மையப்பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் நிறுவனம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கம் ரிக்டர் அளவில் மூன்றாக பதிவாகியுள்ளது.
ஒரு உள்ளூர்வாசி இந்த நிலநடுக்கம் “என் வாழ்க்கையில் நான் உணர்ந்த மிக வலிமையான நிலநடுக்கம்” என்று சமூக ஊடகங்களில் எழுதியுள்ளார்.





