சிங்கப்பூருக்கு சென்ற விமானத்தில் வழக்கத்துக்கு மாறான சமிக்ஞை – அவசரமாக தரையிறக்கம்

சிங்கப்பூருக்கு சென்று கொண்டிருந்த விமானம் ஒன்று தைவானுக்கே திருப்பி அனுப்பிவிடப்பட்டுள்ளது.
சைனா ஏர்லைன்ஸ் விமானம் தைப்பே நகரிலிருந்து புறப்பட்டபோது வழக்கத்துக்கு மாறான சமிக்ஞையைப் பெற்றிருந்ததமையே இதற்கு காரணமாகம்.
விமானத்தின் பாதுகாப்பை உறுதிசெய்ய அதை முன்னெச்சரிக்கையாகச் சோதனைக்கு அனுப்ப விமானி முடிவெடுத்தார்.
அவர் விமானத்தைத் தைவானின் காவ்சியுங் நகருக்குத் திருப்பிவிட்டார். விமானத்தில் இருந்த 181 பயணிகளுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டது.
நேற்றுப் பிற்பகல் சிங்கப்பூர் சேரவேண்டிய பயணிகள் இரவு சுமார் 9 மணிக்கு வந்தனர். அவர்களுக்கு உணவு கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 3 times, 1 visits today)