கொழும்பில் கேட்டை தட்டியதற்காக அடைத்து வைக்கப்பட்ட சிறுவனுக்கு நேர்ந்த கதி

கொழும்பு, கெசல்வத்த பகுதியிலுள்ள வீட்டின் இரண்டாவது மாடியில் இருந்து சிறுவன் ஒருவர் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மாடியில் இருந்து நேற்று பிற்பகல் குதித்து சிறுவன் ஒருவர் காயமடைந்த சம்பவம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
சம்பவத்தில் படுகாயமடைந்த கொழும்பு-12 ஐச் சேர்ந்த 12 வயது சிறுவன் தற்போது லேடி ரிட்ஜ்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் அறிவித்துள்ளது.
இந்த சிறுவன் தனது வீட்டிலிருந்து ஒரு கடைக்கு அருகில் வசிக்கும் இரண்டு சிறுவர்களுடன் வந்த போது மூன்று மாடி வீட்டின் இரும்புக் கேட்டைத் தட்டியுள்ளார்.
இதனால் கோபமடைந்த வீட்டின் உரிமையார் சிறுவனை வலுக்கட்டாயமாக வீட்டிற்குள் அழைத்து சென்று இரண்டாவது மாடியில் உள்ள ஒரு அறையில் அடைத்து வைத்துள்ளதாக தெரியவந்துள்ளது.
அச்சமடைந்த சிறுவன் அறையில் ஒரு ஜன்னலைத் திறந்து கீழே குதித்து பலத்த காயங்களுக்குள்ளாகியுள்ளதாக தெரியவந்துள்ளது.
சிறுவனை அடைத்து வைத்த 59 வயதான சந்தே நபர் தப்பியோடியுள்ள நிலையில், அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.