வரலாறு காணாத சரிவில் அமெரிக்க டொலர் – டிரம்ப் வெளியிட்ட நம்பிக்கை

அமெரிக்க டொலர் எப்போதுமே விருப்ப தெரிவான நாணயமாக இருக்கும் என ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அவர் வர்த்தக வரிகளை அறிவித்ததை தொடர்ந்து அமெரிக்க டொலரின் மதிப்பு வரலாறு காணாத சரிவை சரிந்துள்ளது.
யூரோ நாணயத்தோடு ஒப்பிடும்போது மூவாண்டு காணாத அளவுக்கு அமெரிக்க டொலர் சரிந்தது.
இறக்குமதிகளின்மீது விதிக்கப்பட்ட வரிகள் அமெரிக்கா மேலும் பணக்கார நாடாவதற்கு உதவும் என வெள்ளை மாளிகை வலியுறுத்தியது.
இப்போது ஏற்பட்டுள்ள குழப்பம் தற்காலிகமானது என்று வெள்ளை மாளிகை ஊடகச் செயலாளர் கேரொலைன் லெவிட் கூறினார்.
சீனா, அமெரிக்கப் பொருள்கள் மீதான வரியை மேலும் அதிகரித்தது. தீவிரமடைந்துவரும் வர்த்தகப் போர் தொடர்பில் சீன ஜனாதிபதி சி சின்பிங் கருத்து வெளியிட்ட நிலையில்தமது நாடு அச்சப்படவில்லை என்று அவர் கூறினார்.
சீனாவும் ஐரோப்பிய ஒன்றியமும் இணைந்து அமெரிக்காவின் அச்சுறுத்தல் நடைமுறைகளை எதிர்க்க வேண்டும் என சி கேட்டுக்கொண்டார்.