32 பேரை கொன்ற உக்ரைன் மீதான தாக்குதலுக்கு இம்மானுவல் மக்ரோன் கண்டனம்

உக்ரைனின் வடகிழக்கு பகுதியான சுமி நகரில் ரஷ்யா தாக்குதல் மேற்கொண்டது. இதில் 32 பேர் கொல்லப்பட்டும் 80 பேருக்கும் அதிகமானோர் காயமடைந்தும் இருந்தனர்.
இந்த தாக்குதலுக்கு ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் கண்டனம் வெளியிட்டுள்ளார்.
“மனித உயிர்கள் குறித்த கரிசையும் இல்லாமல், அமெரிக்காவின் போர் நிறுத்த விதிமுறைகளை மீறியும்” ரஷ்யா தாக்குதல் மேற்கொண்டுள்ளது.
“அனைவருக்கும் தெரியும் இந்த போரை தொடரவே ரஷ்யா விரும்புகிறது என்பது. அதனை இன்று மீண்டும் ஒருமுறை அது நிரூபித்துள்ளது!” என தெரிவித்துள்ளார்.
(Visited 23 times, 1 visits today)