ஆடம்பரமாக வாழ்ந்தது போதும் – பிறந்தநாளுக்கு பணத்தை வாரி வழங்க தயாராகும் அமெரிக்கர்

அமெரிக்காவின் நபர் ஒருவர் தனது பிறந்தநாளை முன்னிட்டு ஒரு மில்லியன் டொலரை தானமாகக் கொடுக்கப்போவதாக சமூக ஊடகங்களில் தெரிவித்துள்ளார்.
டெக்சஸ் மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் தாமஸ் ஜே ஹென்ரி என்பவரே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஆடம்பரமாக வாழ்ந்தது போதும், இனி மக்களுக்கு உதவவேண்டும் என எண்ணி அந்த முயற்சியில் இறங்கியதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏப்ரல் 7ஆம் திகதியிலிருந்து வாரந்தோறும் ஐந்து பேருக்கு 5,000 டொலர் கொடுக்கப்போவதாக அவர் அறிவித்தார்.
மேலும், டிசம்பரில் இரண்டு பேருக்கு 100,000 டொலர் கொடுக்கப்போவதாகவும் கூறினார்.
இவ்வாறு சமூகத்தில் உள்ளோருக்கு ஹென்ரி அவரது நன்றியைத் தெரிவிக்க நினைப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பலரும் ஹென்ரியைப் பாராட்டியுள்ளனர். இதுதான் உண்மையான டெக்சஸ் உணர்வு!” என்றார் ஒருவர். சமூகத்திற்குத் திருப்பிக் கொடுக்கவேண்டும் என்ற அவரது எண்ணம் பாராட்டுக்குரியது என பலரும் தெரிவித்துள்ளனர்.