இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள பாரிய அதிகரிப்பு

இலங்கையில் இன்றையதினம் மாத்திரம் தங்க விலையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
கொழும்பு செட்டியார் தெரு தங்க வியாபாரிகள் சங்கத்தினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.
24 கரட் தங்கத்தின் விலை 7,000 ரூபாவினாலும், 22 கரட் தங்கத்தின் விலை 6,000 ரூபாவினாலும் மற்றும் 18 கரட் தங்கத்தின் விலை 4,500 ரூபாவினாலும் அதிகரித்துள்ளதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
அந்த வகையில் கொழும்பு செட்டியார் தெருவின் தற்போதைய தங்க விலை நிலவரப்படி,
24 கரட் தங்கம் 253,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 232,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கம் 190,000 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கம் ஒரு கிராம் 31,625 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 29,000 ரூபாவாகவும், 18 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 23,750 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகிறது.