IMF இலங்கைக்கான புதிய தூதுக் குழு தலைவர் பிரதமருடன் சந்திப்பு

சர்வதேச நாணய நிதியத்தின் தூதுக்குழு பிரதமர் அலுவலகத்தில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து, நாட்டின் பொருளாதார விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியது.
சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவிலான நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் இலங்கையின் இதுவரையிலான முன்னேற்றம் மற்றும் நாட்டின் எதிர்கால பொருளாதார இலக்குகளை அடைய தேவையான அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்தும் இந்த கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது.
வளர்ந்து வரும் பொருளாதார சவால்கள் மற்றும் அவற்றுக்கான தீர்வு நடவடிக்கைகள் குறித்தும் இரு தரப்பினரும் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.
(Visited 23 times, 1 visits today)