ஐரோப்பா

பிரித்தானியாவில் 72 மணிநேரம் உயிர்வாழும் கருவியை பேக் செய்யுமாறு வலியுறுத்தல்!

பிரிட்டன் போருக்குச் சென்றால் நிலைமை எப்படி இருக்கும் என்பதை ஒரு போர் நிபுணர் வெளிப்படுத்தியுள்ளார்.

பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நிபுணரான பேராசிரியர் அந்தோணி க்ளீஸ், நவீன காலப் போரில் பிரிட்டன் ஆயுதபாணியாக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அது நடந்தால், இரண்டாம் உலகப் போரின் போது புதிய உணவு, பெட்ரோல் அல்லது டீசல் தட்டுப்பாடு, மருந்துகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டதை போல தற்போதும் ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

இங்கிலாந்தின் எரிவாயு விநியோகத்தில் கிட்டத்தட்ட 40 சதவீதம் நோர்வேயிலிருந்து இறக்குமதி செய்யப்படுவதால், வட கடலில் புடினின் நடவடிக்கைகள் குறித்த அச்சங்கள் அதிகமாக உள்ளன.

இதில் பெரும்பாலானவை 700 மைல் நீளமுள்ள லாங்கல்டு குழாய் வழியாக வருகின்றன. மேலும், முக்கிய தொலைத்தொடர்புகளும் கடலுக்கடியில் இயங்குகின்றன.

எரிசக்தி குழாய்கள் மீது ரஷ்ய தாக்குதல் நடத்தினால் அல்லது  பிரிட்டனை இருட்டடிப்புக்குள் தள்ளக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டால், குடும்பங்கள் 72 மணிநேர ‘உயிர்வாழும் கருவியை’ பேக் செய்யுமாறு எச்சரிக்கப்பட்டுள்ளது.

(Visited 7 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்