ஐரோப்பா

ட்ரம்பின் வரிகளால் ஏற்படக்கூடிய குழப்பத்திலிருந்து பிரிட்டி‌ஷ் வர்த்தகங்களைப் பாதுகாக்க பிரதமர் ஸ்டார்மர் உறுதி

பிரிட்டி‌ஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர், அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப்பின் புதிய வரிகளால் ஏற்படக்கூடிய குழப்பத்திலிருந்து பிரிட்டி‌ஷ் வர்த்தகங்களைப் பாதுகாக்க தொழிற்துறை சார்ந்த கொள்கைகளைப் பயன்படுத்தப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

புதிய வரிகளைத் தவிர்க்க அமெரிக்காவுடன் வர்த்தக ரீதியான உடன்பாட்டைச் செய்துகொள்ள தொடர்ந்து முயற்சி செய்யப்போவதாக ஸ்டார்மர் குறிப்பிட்டார்.இருப்பினும், அரசாங்கம் தலையிட்டு வர்த்தகங்களைப் பாதுகாக்கவேண்டும் என்ற யோசனையை அவர் முன்வைத்தார்.

அரசாங்கம் தலையிட்டு நேரடியாகச் சந்தையை உருவாக்குவது பலர் விரும்பாத ஒன்றாக இருந்தாலும் மிகவும் விரைவாக மாறிவரும் உலகில் பழைய பஞ்சாங்கத்தைச் சார்ந்திருக்க முடியாது என்றார் அவர்.

அமெரிக்காவின் 10% வரிகளை எதிர்கொண்ட நாடுகளில் பிரிட்டனும் ஒன்று. அந்த 10% வரிக்கு அப்பால் பிரிட்டனிலிருந்து இறக்குமதியாகும் கார்கள் உட்பட எஃகு, அலுமினியம் போன்றவற்றுக்கு அமெரிக்கா கூடுதலாக 25% வரி விதித்தது.இன்னும் பல நாடுகள் ஏப்ரல் 9ஆம் தேதியிலிருந்து 50 விழுக்காடு வரையிலான வரிகளை எதிர்நோக்குகின்றன.

“அமெரிக்கப் பயனீட்டாளர்கள் இன்னும் கூடுதலான அமெரிக்கப் பொருள்களை வாங்கவேண்டும், அமெரிக்காவின் உள்நாட்டுப் பொருளாதாரம் பெருகவேண்டும். இதற்காகத்தான் புதிய வரிகளை விதிக்கிறேன்,” என்று டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

பிரிட்டனின் உள்நாட்டுப் போட்டித்தன்மையை மேம்படுத்துவதற்கான திட்டங்கள் இந்த வாரம் அமல்படுத்தப்படும் என்று ஸ்டார்மர் சொன்னார்.

அமைதி காத்து அமெரிக்காவுடன் சிறந்த உடன்பாட்டை எட்டுவதுதான் பிரிட்டனின் அரசாங்கத்தின் நிலைப்பாடு என்றும் அவர் சுட்டினார்.

பிரிட்டனின் வர்த்தகத்துக்கும் உழைக்கும் மக்களின் பாதுகாப்புக்கும் உகந்த உடன்பாட்டை மட்டும் மேற்கொள்ளப்போவதாகவும் அவர் கூறினார்.

(Visited 32 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்