75 நாட்களில் TikTokயை விற்கவில்லை என்றால் தடை – ஜனாதிபதி டிரம்ப் உத்தரவு

Byte Dance நிறுவனம் TikTok செயலியை அமெரிக்க நிறுவனத்திடம் விற்க அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப், இன்னும் 75 நாட்களை கூடுதலாக வழங்கியுள்ளார்.
அப்படி செய்யாவிட்டால் செயலி அமெரிக்காவில் தடை செய்யப்படும். அமெரிக்க நிறுவனம் செயலியை நிர்வகிக்கும் ஒப்பந்தம் கிட்டத்தட்ட முடிவுசெய்யப்படும் நிலையில் இருந்தது.
ஆனால் அதற்கு சீனா அனுமதிக்கவில்லை என்று விவகாரத்தை நன்கு அறிந்த தரப்புகள் கூறியுள்ளது. அந்த ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டிருந்தால் அமெரிக்காவில் TikTok செயலி முதலீட்டாளர்களால் நிர்வகிக்கப்பட்டிருக்கும்.
ByteDance நிறுவனத்தின் பங்கு 20 விழுக்காட்டிற்கும் குறைவாக இருக்கும். அண்மையில் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருள்களுக்கு 54 சதவீத வரியை ஜனாதிபதி டிரம்ப் விதித்தார்.
TikTok செயலியை விற்றால் வரியைக் குறைப்பதைப் பற்றி யோசிக்கலாம் என்று அவர் கூறியிருந்தார்.