500 நாட்களை கடந்து நீடிக்கும் போர் : பெற்றோரை இழந்த குழந்தைகள் அதிகம் கொண்ட பகுதியாக மாறிய காசா!

நவீன உலகில் பெற்றோரை இழந்த குழந்தைகள் அதிகம் கொண்ட பகுதியாக காசா மாறியிருக்கிறது என தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 544 நாட்களாக போர் நடைபெற்று வருகிறது. போரில் இதுவரை 50,523 பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளதாகவும், 1163 இஸ்ரேலியர்கள் பலியாகியுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெற்றோர் ஆதரவற்ற குழந்தைகள் பற்றி பாலஸ்தீன அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிரங்களின்படி, 39,384 குழந்தைகள் தங்கள் பெற்றோர்களில் ஒருவரையாவது இழந்திருக்கிறார்கள் என்றும், இதில் 17,000 குழந்தைகள் பெற்றோரில் இருவரையும் இழந்திருக்கிறார்கள் என்றும் தெரிய வந்திருக்கிறது.
உலகம் முழுவதும் பாலஸ்தீன போர் கடுமையான விவாதங்களை கிளப்பியிருக்கிறது. இந்த போருக்கு தொடக்க காரணமாக ஹமாஸ் அமைப்பு இருந்ததாக சொல்லப்படுகிறமை குறிப்பிடத்தக்கது.
(Visited 25 times, 1 visits today)