உலக நாடுகள் மீது வரி விதிப்பை அமுல்படுத்திய ட்ரம்ப் ரஷ்யாவை விட்டுவைத்தது ஏன்?

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உலக நாடுகள் மீது வரி விதிப்பை அறிவித்துள்ளார். இருப்பினும் இந்த நாடுகளின் பட்டியலில் ரஷ்யா இடம்பெறவில்லை.
இது தொடர்பில் பல்வேறு தரப்பினரும் விமர்சித்திருந்த நிலையில் தற்போது இந்த முடிவை வெள்ளை மாளிகை ஆதரித்துள்ளது.
மாஸ்கோ மீதான அமெரிக்கத் தடைகள் ஏற்கனவே “எந்தவொரு அர்த்தமுள்ள வர்த்தகத்தையும் தடுக்கின்றன” என்று வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில், போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் அமெரிக்க நிர்வாகத்திடமிருந்து 10 சதவீத வரிகளை எதிர்கொள்வதும் சுட்டிக்காட்டத்தக்கது.
விளாடிமிர் புடினின் உயர்மட்ட பேச்சுவார்த்தையாளரான கிரில் டிமிட்ரிவ், வாஷிங்டனில் அமெரிக்க அதிகாரிகளுடன் சந்திப்புகளை நடத்தியபோது இது வருகிறது.
(Visited 1 times, 1 visits today)