இலங்கையில் தம்பதியினரை குறிவைத்து துப்பாக்கிச்சூடு : ஒருவர் பலி!

இலங்கை – ஹிக்கடுவை, குமாரகந்த பகுதியில் உள்ள ஒரு கடையில் நேற்று (2) இரவு தம்பதியினரை குறிவைத்து நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இறந்தவர் சம்பந்தப்பட்ட கடையின் உரிமையாளர் என்று தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூடு மாலை 7 மணியளவில் நடந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
இருவரும் படுகாயமடைந்து காலி தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். காயமடைந்த பெண்ணின் நிலையும் கவலைக்கிடமாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரால் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ஹிக்கடுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
(Visited 32 times, 1 visits today)