ஐரோப்பா

நிக்கலஸ் சார்கோஸியின் தண்டனையை உறுதிப்படுத்தியுள்ள நீதிமன்றம்

பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கலஸ் சார்கோஸியின் 3 வருட சிறைத் தண்டனையை பாரிஸ் மேன்முறையீட்டு நீதின்றம் இன்று உறுதிப்படுத்தியது.

நிக்கலஸ் சார்கோஸி இந்நிலையில் 2007 முதல் 2012ம் ஆண்டுவரை பிரான்ஸின் ஜனாதிபதியாக பதவி வகித்தவர் .ஊழல் வழக்கு ஒன்றில் நிக்கலஸ் சார்கோஸிக்கு 3 வருட சிறைத்தண்டனை விதித்து 2001 மார்ச் மாதம் நீதிமன்றமொன்று தீரப்பளித்தது.எனினும், அவற்றில் 2 வருட சிறைத்தண்டனை ஒத்திவைக்கப்பட்டதுடன் எஞ்சிய ஒரு வருட காலத்தை சிறையில் கழிக்காமல் அவர், இலத்திரனியல் கண்காணிப்புப் பட்டியை அணிந்து கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

நீதித்துறை விசாரணைகள் தொடர்பாக தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்காக தனது முன்னாள் சட்டத்தரணி தியறி ஹேர்ஸோக்குடன் இணைந்து நீதிபதி கில்பர்ட் அஸிபேர்ட்டுடன் ஊழல் ஒப்பந்தமொன்றை நிக்கலஸ் சார்கோஸி செய்து கொண்டிருந்தார் என அதிகாரிகள் குற்றம் சுமத்தினர்.

இதற்காக இரகசிய தொலைபேசி இணைப்பு ஒன்றை யன்படுத்தியதாகவும் சார்கோஸி மீது குற்றம் சுமத்தப்பட்டது. இவ்வழக்கிலேயே 2001 மார்ச்சில் அவருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.தண்டனைக்கு எதிராக நிக்கலஸ் சார்கோஸி மேன்முறையீடு செய்திருந்தார். எனினும், அவருக்கான தண்டனையை பாரிஸ் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று உறுதிப்படுத்தி தீர்ப்பளித்தது.

(Visited 6 times, 1 visits today)

Mithu

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்