உலக சந்தையில் மீண்டும் வரலாறு காணாத உச்சத்தை எட்டிய தங்கத்தின் விலை
உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்த பதிலடி வரிகளை அடுத்து அனைத்துலக பொருளாதாரத்தில் நிலையற்ற சூழல் எழுந்துள்ளது.
தங்கத்தின் விலை அவுன்ஸிற்கு (ounce) 3,118 டொலரை எட்டியது. அது 0.3 சதவீத அதிகரிப்பாகும்.
தங்கத்தின் விலை உயர்வதற்கு வர்த்தகத்தில் ஏற்பட்டிருக்கும் நிலையற்ற சூழல் மட்டும் காரணம் இல்லை. ஐரோப்பா, மத்திய கிழக்கு ஆகிய பகுதிகளில் எழுந்துள்ள சர்ச்சைகளும் காரணங்களாக முன்வைக்கப்பட்டுள்ளன.
கடந்த மாதம் தங்கத்தின் விலை முதன் முறையாக 3,000 டொலரை தாண்டியது. பொருளாதாரம் நிலையாக இல்லாதபோது முதலீட்டாளர்கள் தங்கத்தில் முதலீடு செய்வதைப் பாதுகாப்பான தெரிவாகப் பார்க்கின்றனர்.





