3வது முறையாகவும் அமெரிக்க ஜனாதிபதியாகும் முயற்சியில் ட்ரம்ப்

அமெரிக்க குடிமக்கள் தன்னை 3வது முறையாகவும் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்க விருப்பப்படுவதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அரசமைப்பின் 22வது சாசனப் பிரிவிற்கமைய, எந்தவொரு நபரும் அமெரிக்க ஜனாதிபதியாக பதவிக்கு 2 முறைக்கு மேல் தேர்ந்தெடுக்கப்பட முடியாது என வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அமெரிக்க ஜனாதிபதிபதவியை ஏற்கெனவே இருமுறை வகித்த ஒருவர், மூன்றாவது முறை போட்டியிட வேண்டுமெனில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும்.
அப்படி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் மேற்கண்ட அரசமைப்பு சாசனப்பிரிவில் மாற்றம் மேற்கொள்ள வேண்டுமெனில், ஆளுங்கட்சிக்கு மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை இருக்க வேண்டும்.
இல்லையெனில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மூன்றில் 2 பங்கினரின் ஆதரவு இந்த சட்டத்திருத்தத்துக்கு இருக்க வேண்டும். ஆனால், டிரம்ப் சார்ந்துள்ள குடியரசுக் கட்சிக்கு அத்தனை பெரும்பான்மை நாடாளுமன்றத்தில் இல்லை.
எனினும், டிரம்ப் 3வது முறையாக ஜனாதிபதியாக இன்னொரு வழியும் இருப்பதை மறுப்பதற்கில்லை. அதற்கமைய, அவர் அடுத்த தேர்தலில் துணை ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றால், அதன்பின், அப்போதைய ஜனாதிபதியாக பதவிவகிப்பவர் தமது பதவிக்காலம் முடிவடைவதற்குள் இராஜிநாமா செய்துவிட்டார் எனில், துணை ஜனாதிபதியாக பதவி ஏற்றுக்கொள்ளலாம்.
தற்போது 78 வயதாகும் டிரம்ப்பின் பதவிக்காலம் முடியும்போது, அவருக்கு 82 வயதாகிவிடும். இதன்மூலம், அமெரிக வரலாற்றில் முதுமையான ஜனாதிபதி என்கிற பெருமை டிரம்ப்புக்கு போய் சேரவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.