ஜெர்மனியில் அதிகரிக்கும் இரட்டை குடியுரிமை விண்ணப்பங்கள்! ஆவணங்கள் குறித்து முக்கிய அறிவிப்பு

ஜெர்மனியில் புதிய இரட்டைக் குடியுரிமைச் சட்டத்தின் கீழ் பலர் ஜெர்மன் குடியுரிமைக்கு விண்ணப்பித்து வருகின்றனர்.
ஆனால் நீங்கள் அதைப் பெற்றவுடன், உங்களுக்கு என்ன ஆவணங்கள் தேவை என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.
முதலாவதாக உங்களுக்கு தேவைப்படும் மிக முக்கியமான ஆவணம் குடியுரிமைச் சான்றிதழ் ஆகும். நீங்கள் ஒரு ஜெர்மன் குடிமகன் என்பதை இது நிரூபிக்கிறது.
ஜெர்மன் கடவுசீட்டு மற்றும் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க உங்களுக்கு இது தேவைப்படும்.
ஜெர்மன் கடவுசீட்டு உலகின் மிகவும் சக்திவாய்ந்த கடவுசீட்டுக்களில் ஒன்றாகும். இதனை வைத்து நீங்கள் பல நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும்.
மேலும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் சுதந்திரமாக செல்ல உங்களை ஜெர்மன் கடவுசீட்டு அனுமதிக்கிறது.
அடுத்த முக்கிய ஆவணம் ஜெர்மன் அடையாள அட்டை ஆகும். ஜெர்மனியர்கள் எப்போதும் குறைந்தபட்சம் ஒரு அதிகாரப்பூர்வ அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.
வங்கிக் கணக்குகளைத் திறப்பது அல்லது ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது உள்ளிட்ட பல விடயங்களுக்கு இது தேவையாகும்.
நீங்கள் ஜெர்மன் குடியுரிமை பெற்றவுடன், உங்களுக்கு குடியிருப்பு அனுமதி தேவையில்லை. உங்களிடம் அவ்வாறான குடியிருப்பு அனுமதிகள் இருப்பின் அவற்றை இரத்து செய்யலாம்.
வாக்களிக்கும் உரிமை மூலம் உள்ளூர் அதிகாரம் உங்களை ஒரு ஜெர்மன் குடிமகனாக பதிவு செய்யும்.
அதாவது நீங்கள் இப்போது ஜெர்மன் தேர்தல்களில் வாக்களிக்கலாம். இது தொடர்பான உதவிகளுக்கு குடிமக்கள் அலுவலகத்தை நாட முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.