இலங்கையில் இருதய நோயாளர்களின் எண்ணிக்கை உயர்வு

நாளுக்கு நாள் நாட்டில் இருதய நோயினால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயர்வடைந்து வருவதாக இருதயநோய் நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இதனைத் தெரிவித்தார்.
தினசரி 175 முதல் 200 பேர் வரை இருதய நோயாளர்களாக அடையாளங் காணப்படுவதாக வைத்தியர் கோட்டாபய ரணசிங்க கூறினார்.
உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே இருதய நோய்க்கு வழிவகுப்பதாக இருதயநோய் நிபுணர் வைத்தியர் கோட்டாபய ரணசிங்க சுட்டிக்காட்டினார்.
(Visited 29 times, 1 visits today)