சார்ள்ஸ் மன்னர் வைத்தியசாலையில் அனுமதி!

பிரித்தானியாவின் மூன்றாவது சார்ள்ஸ் மன்னர் உடல்நிலை மோசமடைந்தமையின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு ஏற்பட்டுள்ள புற்றுநோயிற்காக சிகிச்சையளிக்கப்பட்ட போது ஏற்பட்ட பக்கவிளைவின் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் பர்க்கிங்ஹேம் நகரத்திற்கு அவர் செல்லவிருந்த சுற்றுப்பயணமும் இரத்து செய்யப்பட்டுள்ளதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
76 வயதான சார்ள்ஸ் மன்னருக்கு, கடந்த ஆண்டு பிப்ரவரியில், விரிவாக்கப்பட்ட புரோஸ்டேட் சரிசெய்தல் செயல்முறைக்குப் பிறகு சோதனைகளைத் தொடர்ந்து, குறிப்பிடப்படாத வகை புற்றுநோயால் கண்டறியப்பட்டதிலிருந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
(Visited 17 times, 1 visits today)