காலில் விழுவதற்கு சம்பளம் கொடுத்தாரா ரியான் பராக்? இணையத்தில் கடும் விமர்சனம்

குவாஹாத்தியில் உள்ள பர்சபாரா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையே நடந்த போட்டியின் போது, ஒரு ரசிகர் பாதுகாப்பை மீறி மைதானத்திற்குள் நுழைந்து, ரியான் பராக்கின் கால்களைத் தொட்டு அவரை கட்டிப்பிடித்தார்.
இது தொடர்பான வீடியோக்களும் புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
போட்டியில் 152 ரன்கள் என்ற இலக்கை துரத்திக் கொண்டிருந்த இரண்டாவது இன்னிங்ஸின் 12வது ஓவரில் நிகழ்ந்தது. ரியான் பராக், தனது நான்காவது ஓவரை வீசுவதற்கு தயாராகி, பந்து வீச்சுக்கு ஓடி வரும்போது, திடீரென ஒரு இளம் ரசிகர் பாதுகாப்பு வளையத்தை உடைத்து மைதானத்திற்குள் ஓடி வந்தார்.
அவர் நேராக ரியான் பராக்கை நோக்கி சென்று, அவரது கால்களைத் தொட்டு தனது அன்பை வெளிப்படுத்தினார். பின்னர் அவரை கட்டிப்பிடித்தார். இது ரியானுக்கு ஆச்சரியமாக இருந்தாலும், மைதானத்தில் இருந்த பாதுகாவலர்கள் உடனடியாக அந்த ரசிகரை பிடித்து வெளியேற்றினர். திடீரென ரசிகர் மைதானத்திற்குள் புகுந்த காரணத்தால் அவரை மைதானத்தை விட்டு வெளியே சிறிது நேரம் ஆட்டம் தடைபட்டது.
இதற்கான வீடியோ, புகைப்படங்களை பார்த்த ரியான் பராக் ரசிகர்கள் ஒரு பக்கம் இவருக்கு இவ்வளவு பெரிய ரசிகரா என்று ஆச்சரியப்பட்டாலும் நெட்டிசன்கள் ரியான் பராக்கை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
ஏனென்றால், ரியான் பராக் இதற்காக ரூ.10,000 கொடுத்து ஒருவரை அழைத்திருக்கலாம்” என்று சமூக வலைதளங்களில் கடுமையாக அவரை விமர்சித்து பதிவுகளை வெளியீட்டு வருகிறார்கள்.
ஒருவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் “ரியான் பராக், விராட் கோலி மாதிரி தன்னை காட்டிக்கொள்ள ரூ.10,000 கொடுத்து ஒருவரை மைதானத்திற்குள் அழைத்து வந்திருக்கிறார்” என பதிவிட்டுள்ளார். மேலும் சிலர் “இது ஒரு PR (பப்ளிக் ரிலேஷன்ஸ்) ஸ்டண்ட்” என்று குறிப்பிட்டார். ஒரு பக்கம் அவரை விமர்சித்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் ரியான் பராக், அசாம் மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதால், குவாஹாத்தியில் அவருக்கு பெரும் ரசிகர் பட்டாளம் உள்ளது. எனவே, அவர் மீது அன்பு வைத்த காரணத்தால் தான் ரசிகர் இப்படி செய்திருக்கிறார் என அவருக்கு ஆதரவாகவும் ரசிகர்கள் பேசி வருகிறார்கள்.