யாழ் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள விசேட அறிவுறுத்தல்!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் தற்போது வெப்பமான வானிலை அதிகரித்து வருகின்றது.
இந்த நிலையில் அது தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையம் வலியுறுத்தியுள்ளது.
யாழ்ப்பாண ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்துரைத்த அதன் உதவிப்பணிப்பாளர் என்.சூரியராஜா இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், உடல் வெப்பத்தைத் தணிக்கக் கூடிய நீராகாரங்களை அதிகமாக உட்கொள்ளுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
(Visited 2 times, 1 visits today)