இலங்கையில் சாதாரண தர பரீட்சையில் தமிழ் மொழி பரீட்சை எழுதிய 88 வயதான பெண்

அங்குருவதோட்டை, பிரபுத்தகமவைச் சேர்ந்த 88 வயதான ஓய்வுபெற்ற ஆசிரியர் ஒருவர் சாதாரண தர பரீட்சையில் தமிழ் மொழி பரீட்சைக்கு முகம் கொடுத்துள்ளார்.
சாதாரண தர பரீட்சையின் இறுதி நாளான நேற்று ஹொரண தக்ஷசில மத்திய கல்லூரிக்கு பரீட்சை எழுத அவர் வருகைத்தந்துள்ளார்.
40 ஆண்டுகள் கற்பித்த ஆசிரியரான 88 வயதான மிசிலின்னோனா என்ற பெண்ணே இவ்வாறு பரீட்சை்ககு முகம் கொடுள்ளார்.
1937 ஆம் ஆண்டு பிறந்த அவர் தனது மூத்த மகள் மற்றும் பேத்தியுடன் அங்குருவதோட்டை, பிரபுத்தகமவில் வசிக்கிறார்.
அவர் தனது இளைய மகளுடன் ஹொரணையிலுள்ள பாடசாலைக்கு நேற்று வருகைத்தந்துள்ளார்.
மாணவர்கள் அதிகாலையிலேயே தங்களுடன் தமிழ் பாடத் தேர்வு எழுதிக்கொண்டிருந்த தங்கள் பாட்டியை வாழ்த்தியுள்ளனர்ஃ
அவருக்கு முதன்முதலில் 20 வயதில் ஆசிரியர் நியமனம் கிடைத்தது. 40 வருட வெற்றிகரமான சேவையை முடித்த பின்னர் 1996 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார்.
“நான் இப்போது கிட்டத்தட்ட 30 வருடங்களாக ஓய்வு பெற்றுவிட்டேன். நான் வீட்டிலிருந்து வேலை செய்து நல்ல வாழ்க்கையை நடத்துகிறேன். தையல் மற்றும் பின்னலில் ஈடுபடுகின்றேன்.
வீட்டில் உட்கார்ந்திருப்பதை விட இன்னும் கொஞ்சம் தமிழ் கற்றுக்கொள்வது நல்லது என்று நினைத்தேன். நான் சில புத்தகங்களை வாங்கி மீண்டும் தமிழ் படிக்க ஆரம்பித்தேன். எனக்கு ஆசிரியர் இல்லை. நான் தனியாக கற்றுக்கொள்கிறேன்.
இன்று, 88 வயதில், நான் என் 16 வயது பிள்ளைகளுடன் தேர்வு அறையில் அமர்ந்து தமிழ் பாடத் தேர்வை எழுதிக் கொண்டிருக்கிறேன்.
இன்று என் வாழ்வில் மிகவும் மகிழ்ச்சியான மற்றும் மறக்க முடியாத நாள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
மின்னணு நோய்வாய்ப்பட்ட விடுப்புச் சான்றிதழ்களின் பயன்பாட்டை அதிகப்படுத்துவதே இதன் நோக்கமாகும், ஏனெனில் “ஆன்லைன் நோய்வாய்ப்பட்ட விடுப்புச் சான்றிதழைப் பயன்படுத்தி, மருத்துவரை அடையாளம் கண்டு அவர்களைக் கண்காணிக்க முடியும்.”