வெள்ளவத்தை, பாணந்துறை கடற்பகுதிகளுக்கு செல்லும் மக்களுக்கு விசேட எச்சரிக்கை!

வௌ்ளவத்தை, கல்கிசை, பாணந்துறை கடற்பகுதிகளில் மீண்டும் முதலைகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால் மக்களுக்கு இலங்கை உயிர்காப்பு சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளத.
இது தொடர்பில் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசங்க நாணயக்கார தெரிவித்தார்.
குறித்த கடற்பகுதிகளுக்கு செல்லும்போது எச்சரிக்கையாக செயற்படுமாறு அவர் பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டார்.
இந்த விடயம் தொடர்பில் பொதுமக்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை உயிர்காப்பு சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசங்க நாணயக்கார மேலும் தெரிவித்தார்.
(Visited 27 times, 1 visits today)