தென்கொரிய காட்டுத்தீ : 24 பேர் உயிரிழப்பு, 27,000 க்கும் மேற்பட்டவர்கள் வெளியேற்றம்!

தென் கொரியாவின் தென்கிழக்கு பிராந்தியத்தில் தொடர்ந்து ஏற்பட்டுள்ள காட்டுத்தீயில் குறைந்தது 24 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் 60-70 வயதுக்கு உட்பட்டவர்கள் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் சுமார் 26 பேர் காயமடைந்துள்ளனர் – அவர்களில் 12 பேர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கொடிய காட்டுத்தீ 27,000 க்கும் மேற்பட்டவர்களை தங்கள் வீடுகளை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த காட்டுத்தீ முன்னோடியில்லாத வகையில் இருப்பதாகவும் நாட்டின் வரலாற்றில் மிக மோசமான காட்டுத்தீக்கான சாதனை புத்தகங்களை மீண்டும் எழுதுகிறது” என்றும் தற்காலிக ஜனாதிபதி ஹான் டக்-சூ கூறினார்.
தீ விபத்துக்கள் உய்சோங் நகரில் உள்ள 1,300 ஆண்டுகள் பழமையான கவுன்சா கோவிலை எரித்துவிட்டன, அங்கு பல கலாச்சார நினைவுச்சின்னங்கள் அகற்றப்பட்டு பாதுகாப்பான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டதாக கூறப்படுகிறது.
இதேவேளை பலத்த மற்றும் வறண்ட காற்றினால் தீ அண்டை மாவட்டங்களான அன்டோங், சியோங்சாங், யோங்யாங் மற்றும் யோங்டியோக் ஆகிய பகுதிகளுக்கு பரவி வருவதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.