சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற தென்கொரிய பெண் கைது

நேபாள எல்லை வழியாக சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் நுழைய முயன்ற பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உத்தர பிரதேச மாநிலம் பஹ்ரைக் மாவட்டத்தில் உள்ள ரூபைதிகா பகுதி அருகே நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் போலீசார் சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோதே குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளார்.
அந்த பெண்ணிடம் நடத்தப்பட்ட விசாரணையில், அவரது பெயர் பார்க் செர்யோன்(வயது 54) என்பதும், அவர் தென் கொரியா நாட்டில் உள்ள சியோல் நகரைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.
அவரிடம் உரிய ஆவணங்கள் எதுவும் இல்லாத நிலையில், போலீசார் அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
(Visited 27 times, 1 visits today)