கஞ்சா தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட புதிய சோதனை
கஞ்சா பயன்பாடு பல நோய்களுக்கு வெற்றிகரமான தீர்வாக இருப்பதாக அவுஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆராய்ச்சிக்காக 3000 நோயாளிகள் பயன்படுத்தப்பட்டதாக ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
அந்த நோயாளிகளில் புற்றுநோய் மற்றும் மனநோயாளிகளும் அடங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ குணம் கொண்ட கஞ்சா பயன்படுத்த முடியும் என்று வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அத்துடன், வைத்தியர்கள் பரிந்துரைக்கும் மருந்தளவுக்கு ஏற்ப கஞ்சா பயன்படுத்தப்பட வேண்டுமென வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன.
மருத்துவத்திற்காக கஞ்சா முதன்முதலில் அவுஸ்திரேலியாவில் 2016 இல் உரிமம் பெற்றது.
மேலும், நாட்டில் தற்போது 332,000 க்கும் மேற்பட்ட நோயாளிகள் மருத்துவ பரிந்துரைகளின் அடிப்படையில் மருத்துவ கஞ்சா பயன்படுத்துகின்றனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.