ஐரோப்பா

அமெரிக்காவில் டெஸ்லா கார்களுக்கு தீ வைப்பு – கடும் கோபத்தில் எலான் மஸ்க்

அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளிலும் டெஸ்லா கார்களுக்கும், கார் சேவை மையங்களுக்கும் தீ வைப்புச் சம்பவங்கள் அதிகரித்துள்ளது.

சில இடங்களில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களும் நடந்திருக்கும் நிலையில், இதனை உள்ளூர் பயங்கரவாதம் என டெஸ்லா தலைமை செயல் நிர்வாகி எலான் மஸ்க் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இந்த தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவித்திருக்கும் எலான் மஸ்க், இதனை பயங்கரவாதம் என்று குறிப்பிட்டிருப்பதோடு, இதுபோன்ற வன்முறைகள் முட்டாள்தனமானது மற்றும் மிகவும் தவறானது என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் லொஸ் வேகாஸில் பல டெஸ்லா வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவங்களும் கார்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவங்களும், நள்ளிரவில் டெஸ்லா கார் சேவை மையங்களுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவங்களும் அதிகரித்துள்ளது.

டெஸ்லா கொலிஷன் சென்டரில் தீ வைக்கப்பட்ட சம்பவத்தில் அங்கிருந்த ஐந்து வாகனங்கள் முற்றிலும் எரிந்து நாசமானது. இந்த சம்பவங்களை விசாரித்து வரும் அமெரிக்க FBI அதிகாரிகள், இது சில பயங்கரவாத சக்திகளின் பங்கு இருக்கலாம் என்று தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

வாகன சேவை மையத்தின் உரிமையாளர் இதுபற்றி கூறுகையில் மதுபானம் ஊற்றப்பட்டு, மீது துப்பாக்கியால் சுடப்பட்டதாகவும் குறிப்பிட்டிருக்கிறார். டெஸ்லா சேவை மையத்தின் முகப்புக் கதவில் எதிர்ப்பு என்ற வார்த்தை எழுதப்பட்டிருந்ததாகவும் விசாரணை தொடங்கியிருக்கிறது. FBI அதிகாரிகளுடன் பயங்கரவாத அதிரடிப் படையினரும் இணைந்து விசாரித்து வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

டெஸ்லா அமைப்புகளை குறி வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதர்கவும், இது தொடர்பான விடியோக்களில், கார்கள் எரிந்துகொண்டிருக்கும்போது, குற்றவாளி என சந்தேகிக்கப்படும் நபர் கருப்பு நிற உடையில் கார்களுக்கு இடையே ஒரு பையுடன் நடந்து செல்வது பதிவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

SR

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!