ஜெர்மனியில் பரவும் அரியவகை சதை உண்ணும் கண் பூச்சி – ஒருவர் பலி! தீவிர கண்காணிப்பில் இருவர்!

சதை உண்ணும் கண் பூச்சி பரவலால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜெர்மனியில் உள்ள ஒரு மருத்துவமனையில் மூன்று ஆண்கள் ஒரு அரிய சதை உண்ணும் பூச்சியால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
47, 65 மற்றும் 81 வயதுடைய மூன்று நோயாளிகளும் இந்த பயங்கரமான நோயால் வெவ்வேறு வழிகளில் பாதிக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது, ஆனால் அனைவருக்கும் ஒரே அறிகுறிகள் இருந்தன.
முதல் நோயாளி குறித்த தொற்றால் பாதிக்கப்பட்ட பிறகு அவருக்கு கண்வீக்கம் மற்றும் வாந்தி, குமட்டல் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மருந்துகளை உட்கொள்ளும் போது, அவரது வெப்பநிலை உயர்ந்து, இரவு முழுவதும் அவரது கண்ணைச் சுற்றி வெள்ளைப் புண்கள் உருவாகத் தொடங்கியதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்கள் அவரை அறுவை சிகிச்சைக்கு அழைத்துச் சென்றனர், அங்கு அவரது கண், மூக்கு மற்றும் கழுத்தைச் சுற்றி நெக்ரோடிக் [இறந்த] திசுக்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். பல மருந்து எதிர்ப்பு பாக்டீரியாவை உருவாக்கிய இரண்டு வாரங்களுக்குள் அவர் காலமானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏனைய இருவரும் மருத்துவர்களின் கண்காணிப்பில் உள்ளனர்.