6 ஒளி ஆண்டுகளுக்கும் குறைவான தொலைவில் இனங்காணப்பட்டுள்ள 04 சிறுகோள்கள்!

6 ஒளி ஆண்டுகளுக்கும் குறைவான தொலைவில் உள்ள ஒரு நட்சத்திரத்தைச் சுற்றி நான்கு கோள்கள் இருப்பதை வானியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
உலகின் மிக சக்திவாய்ந்த தொலைநோக்கிகள் சிலவற்றின் உதவியுடன் இவற்றை கண்டுப்பிடித்துள்ளதாக அறிவித்துள்ளனர்.
அக்டோபர் 2024 இல் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி, பூமிக்கு இரண்டாவது மிக நெருக்கமான ஒற்றை நட்சத்திர அமைப்பான பர்னார்டின் நட்சத்திரத்தைச் சுற்றி ஒரு கோள் சுழன்று கொண்டிருப்பதை வெளிப்படுத்தியது.
ஆனால் உலகெங்கிலும் உள்ள தொலைநோக்கிகளின் கலவையானது நான்கு சிறிய வெளிப்புறக் கோள்கள் இருப்பதை உறுதிப்படுத்தியதாக கடந்த வாரம் தி ஆஸ்ட்ரோபிசிகல் ஜர்னல் லெட்டர்ஸில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
(Visited 4 times, 1 visits today)