இலங்கை – காதல் உறவு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் : யுவதி பலி!

இலங்கையில் – காதல் உறவு தொடர்பாக ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததை அடுத்து, காதலனின் கூர்மையான ஆயுதத்தால் காதலி ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் நேற்று (18) வென்னப்புவ, வைக்கல பகுதியில் பதிவாகியுள்ளது.
காதலியின் வீட்டிற்குள் கத்திக்குத்து நடந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவத்தில் கத்திக்குத்தில் சிக்கி இறந்த நபர் விமல்கா துஷாங்கி சில்வா என்ற 20 வயது பெண் ஆவார்.
இந்த சம்பவம் தொடர்பாக 21 வயது இளைஞர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். வென்னப்புவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(Visited 2 times, 2 visits today)