ஹமாஸ் பணயக் கைதிகளை விடுவிக்க மறுத்ததால் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல் – இஸ்ரேல்!

ஹமாஸ் “எங்கள் பணயக்கைதிகளை விடுவிக்க மறுத்ததால்” இன்று காலை வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டதாக இஸ்ரேலிய அரசாங்கம் கூறியுள்ளது.
இதன் விளைவாக இஸ்ரேல் “அதிகரிக்கும் இராணுவ வலிமையுடன்” ஹமாஸுக்கு எதிராக செயல்படும் என்று பெஞ்சமின் நெதன்யாகு அலுவலகத்திலிருந்து ஒரு அறிக்கை வெளியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதற்கு பதிலளிக்கும் விதமாக, முன்னர் ஒப்புக் கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்திலிருந்து அரசாங்கம் ஏன் விலகத் தேர்ந்தெடுத்தது என்று பணயக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்கள் மன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
பணயக்கைதிகளை விடுவிப்பதற்காக போர் புதுப்பிக்கப்படுகிறது என்ற கூற்று முழுமையான ஏமாற்று வேலை – இராணுவ அழுத்தம் பணயக்கைதிகள் மற்றும் வீரர்களுக்கு ஆபத்தை விளைவிக்கிறது” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதேவேளை காசாவில் ஹமாஸால் 59 பணயக்கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேல் நம்புகிறது, 24 பேர் உயிருடன் இருப்பதாக கருதப்படுகிறது.