அடுத்த மாதம் முதல் நட்பு நாடுகளுக்கும் கூடுதல் வரி விதிக்கப்படும் – டிரம்ப் அதிரடி

அமெரிக்காவின் நட்பு நாடுகளுக்கும், அவர்கள் விதிக்கும் வரிகளுக்கு இணையாக வரி விதிக்கப்போவதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஏப்ரல் மாதம் 2ஆம் திகதி முதல், இந்த வரி விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
புளோரிடாவில் உள்ள தமது ரிசார்டில் வார விடுமுறையை கழித்துவிட்டு, எலான் மஸ்குடன் வாஷிங்டனுக்கு ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் டிரம்ப் திரும்பினார்.
விமானத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்த டிரம்ப், ஏப்ரல் ஒன்று முட்டாள்கள் தினம் என்பதால் இரண்டாம் திகதி முதல் புதிய வரிகளை விதிக்கப்போவதாக தெரிவித்தார்.
(Visited 7 times, 1 visits today)