ஈரானுக்கு அமெரிக்கா கடும் எச்சரிக்கை

ஈரான் கடும் விளைவை ஈரான் எதிர்கொள்ளவேண்டியிருக்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்காவை அச்சுறுத்த நினைத்தால், அதற்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
ஏமனிலிருந்து செயற்படும் ஹவூதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவு அளிப்பதை ஈரான் உடனடியாக நிறுத்த வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை காஸா மீதான இஸ்ரேலின் முற்றுகைக்கு பதிலளிக்கும் விதமாக இஸ்ரேலிய கப்பல்கள் மீது மீண்டும் தாக்குதல்களை நடத்துவோம் என்று ஹவூதி கிளர்ச்சியாளர்கள் அண்மையில் அறிவித்ததை அடுத்து ஹவூதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்க இராணுவம் வான்வழித் தாக்குதலை நடத்தியது.
இதனை தொடர்ந்து அமெரிக்கத் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க தயாராக இருப்பதாக ஹவூதி கிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
(Visited 2 times, 2 visits today)