ஐரோப்பா

இலங்கையை சேர்ந்தவரின் நிறுவனத்தில் பெருமளவு பணம் – நெதர்லாந்து அதிகாரிகள் விசாரணை

இலங்கையின் இரண்டு மருத்துவமனைகளில் முன்னெடுக்கப்படும் திட்டங்களில் ஈடுபட்டுள்ள நெதர்லாந்தை சேர்ந்த சுகாதார நிறுவனம், பிரிட்டிஸ் வேர்ஜின் ஐலண்டில் பதியப்பட்ட நிறுவனம் ஒன்றின் ஓவ்ஷோர் கணக்கில் பெருமளவு பணத்தினை வைப்பிலிடப்பட்டுள்ளமை குறித்து நெதர்லாந்து அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிறுவனத்தின் உரிமையாளர் இலங்கையை சேர்ந்தவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

நெதர்லாந்தின் நிதி புலனாய்வு பிரிவு, ஊழல் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாககுறிப்பிட்ட நிறுவனத்தின் அலுவலகத்தில் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டதாக தனது செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

குறிப்பிட்ட செய்திக்குறிப்பு விசாரணைகளில் சிக்குண்டுள்ள இரண்டு நிறுவனங்களின் பெயர்களை தெரிவிக்கவில்லை.

எனினும் நெதர்லாந்தின் என்ற நாளேடு என்ராவ் நோனியஸ்,ஏகேஎம் இன்டநஷனல் புரொஜெக்ட் டிவலப்மென்ட் என்ற இரண்டு நிறுவனங்கள் குறித்தே விசாரணைகள் இடம்பெறுவதாக தெரிவித்துள்ளது.

இது குறித்த விபரங்களை நெதர்லாந்தின் நாளேடு சண்டே டைம்சுடன் பகிர்ந்துகொண்டுள்ளது.

அம்பாந்தோட்டை நுவரேலியாவில் மருத்துவமனை திட்டங்களை முன்னெடுப்பது தொடர்பில் 2011 இல் கொழும்பில் சுகாதார அமைச்சுக்கும் ஈஎன் புரொஜெக்டிற்கும் இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கை கைச்சாத்தானமை குறிப்பிடத்தக்கது.

(Visited 5 times, 5 visits today)

Mithu

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்