இலங்கையில் வீடொன்றிலிருந்து தம்பதியினரின் சடலங்கள் மீட்பு!

பொகவந்தலாவ – தெரேசியா தோட்ட பகுதியில் உள்ள வீடு ஒன்றிலிருந்து இன்று இரண்டு பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசிய நிலையில், குறித்த பகுதி மக்கள் காவல்துறையினருக்குத் தகவல் வழங்கியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
பின்னர் சம்பவ இடத்திற்கு வருகைதந்த காவல்துறையினர் சடலங்களை மீட்டுள்ளனர்.
இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்ட இருவரும் கணவன் மனைவி எனவும் குறித்த இருவரும் கடந்த 14ஆம் திகதி உயிரிழந்திருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்
அத்துடன், சடலங்களுக்கு அருகில் நஞ்சு போத்தல் ஒன்றும் மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
சடலமாக மீட்கப்பட்ட கணவன் 38வயதுடையவரெனவும் மனைவி 37 வயதுடையவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவ காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.