மியன்மாரில் 27 பொதுமக்களை கொன்று குவித்த இராணுவம் : தொடரும் மோதல்கள்!

ஜனநாயக ஆதரவு எதிர்ப்புக் குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மையக் கிராமத்தில் மியான்மர் இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் குறைந்தது 27 பொதுமக்கள் கொல்லப்பட்டதாகவும், 30 பேர் காயமடைந்ததாகவும் மியன்மார் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
நாட்டின் இரண்டாவது பெரிய நகரமான மண்டலேயிலிருந்து வடக்கே சுமார் 65 கிலோமீட்டர் (40 மைல்) தொலைவில் உள்ள சிங்கு நகரத்தில் உள்ள லெட் பான் ஹ்லா கிராமத்தில் இந்த தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 1, 2021 அன்று ஆங் சான் சூகியின் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்திடமிருந்து இராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றியதிலிருந்து மியன்மாரில் அரசியல் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
இது பரவலான மக்கள் எதிர்ப்பைத் தூண்டியது. அமைதியான ஆர்ப்பாட்டங்கள் கொடிய படையால் அடக்கப்பட்ட பிறகு, இராணுவ ஆட்சியை எதிர்ப்பவர்கள் பலர் ஆயுதம் ஏந்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.