அமெரிக்காவின் F-35 போர் விமானத்தை வாங்கவேண்டுமா? கனடாவின் புதிய பிரதமர் முன்வைத்துள்ளகோரிக்கை!

அமெரிக்காவின் F-35 போர் விமானத்தை வாங்குவதை மறுபரிசீலனை செய்யுமாறு கனடாவின் புதிய பிரதமர் மார்க் கார்னி பாதுகாப்பு அமைச்சர் பில் பிளேரிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அமெரிக்க இராணுவ ஒப்பந்ததாரர் லாக்ஹீட் மார்டினின் F-35 ஐ வாங்குவதற்கான ஒப்பந்தம் தற்போது நடைமுறையில் உள்ளது என்றும், முதல் 16 விமானங்களுக்கான நிதியை கனடா சட்டப்பூர்வமாக உறுதியளித்துள்ளதாகவும் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர் லாரன்ட் டி காசனோவ் கூறினார்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 88 F-35 விமானங்களை வாங்க கனடா ஒப்புக்கொண்டது.
இந்நிலையில் “F-35 ஒப்பந்தம், தற்போதுள்ள நிலையில், கனடாவிற்கு சிறந்த முதலீடா, கனடாவின் தேவைகளை சிறப்பாகப் பூர்த்தி செய்யக்கூடிய பிற வழிகள் உள்ளதா என்பதைத் தீர்மானிக்க,” இராணுவத்துடன் இணைந்து பணியாற்றுமாறு பிளேயரைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
(Visited 4 times, 4 visits today)